காரைக்குடி: காரைக்குடி அருகே கண்டனூர் பாலையூர் மகாலெட்சுமி கோயிலில் நேற்று (ஜூன்., 13 ல்) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. காலை 5:30 மணிக்கு கோபூஜையுடன் யாக சாலை ஹோமங்கள் தொடங்கியது. காலை 7:30 மணிக்கு பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடை பெற்ற உடன் கும்ப புறப்பாடு தொடங்கியது. காலை 7:35 முதல் 8:10 க்குள் கும்பாபிஷேகமும், திருவாராதனம் சாற்று முறையும் நடந்தன.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாலையூர் நகரத்தார்கள் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.