கூடலூர்: கூடலூர் மணுக்கு சவுந்தரியகுல தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள மதுபால்தாயம் மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. பூரண கலச கும்பத்துடன் ஊர்வலமாக வந்தனர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தீபாரா தனை, சிறப்புபூஜை நடந்தது.ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.