பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
03:06
கோவை:வெள்ளலூர், இடையர்பாளையத்தில் செயல்படும் சுவாமி விவேகானந்தர் பேரவை சார்பில், கீதா பஜன் என்ற 16ம் ஆண்டு பக்தி திருவிழா, வெள்ளலூர் அரசண்ணன் கோவில் வழிபாட்டு மண்டபம் மற்றும் பெரிய விநாயகர் கோவில் வழிபாட்டு மண்டபத்தில், நாளை
(ஜூன்., 16ல்) காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது.இதையொட்டி, நாளை (ஜூன்., 16ல்) காலை, 7:00 முதல் 9:00 மணி வரை, பிருந்தாவன நாட்டியத்துடன், கீதா பஜன் நடக்கிறது. 9:00 முதல் 11:30 மணி வரை, சரவணம்பட்டி, பாலஜோதி அறக்கட்டளை சார்பில், சங்கீதப்பிரியா பஜன் மண்டலியும்,. 11:30 முதல் மதியம், 2:00 மணி வரை, வாகராயம்பாளையம், கோபியர்கள் கோலாட்ட குழுவினரின் வாகை ஸ்ரீ ஹரி பஜனையும், 2:00 முதல் 4:30 மணி வரை, ஊரி நாமஸ் மரன் பஜன் மண்டலியும், மாலை, 4:30 முதல் இரவு, 7:30 மணி வரை, அன்னூர் அச்சம் பாளையம் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும் நடக்கிறது. இந்நிகழ்ச்சிகள் நடக்கும் அதே நேரத்தில், ஆரோக்கிய ஐஸ்வர்ய ஹோமமும் நடக்கிறது.