Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிபகவானையே கலங்க செய்த அனுமனுக்கு ... பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கும்பாபிஷேக விழா: கணபதி ஹோமத்துடன் துவக்கம் பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கும்பாபிஷேக விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் மரங்கள் வெட்டி சாய்ப்பு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் மரங்கள் வெட்டி சாய்ப்பு

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
12:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் நந்தவனத்தில் இருந்த பழமையான 100 மரங்கள் அடியோடு வெட்டப்பட்டன. கோயில்களில் குளுமை, துாய்மையான காற்றுக்காக முன்னோர்கள் கோயில் பிரகாரம், மதில் சுவர் இடையே மரங்கள் நட்டு நந்தவனம் உருவாக்கினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கு நந்தவனம், பழமையான வேம்பு, புளி, புங்கன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து வனம் போல் காட்சியளித்தது. நந்தவனத்தில் முள்செடிகளும் அடர்ந்திருந்ததால் அவற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவற்றுடன் சேர்த்து பழமையான 100 மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன. வெட்டப்பட்ட முள் செடிகளுக்கு தீவைத்ததில் மேலும் பல வேப்ப மரங்கள் கருகின.

பக்தர்கள் எதிர்ப்பு: நந்தவனமே அடையாளம் தெரியாத அளவிற்கு மரங்களை வெட்டியுள்ளனர்.  இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட துணை தலைவர் சரவணன் கூறுகையில், ராமேஸ்வரத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு வந்ததே இல்லை. இதற்கு மரங்கள் தான் காரணம். நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சாய்த்ததால் கோயிலுக்குள் வறண்டு வரும் தீர்த்த கிணறுகளுக்கு மேலும் சிக்கல் ஏற்படும். ஆன்மிக மரபு மீறி மரங்களை வெட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar