பதிவு செய்த நாள்
18
ஜூன்
2019
02:06
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான கோதண்டராமர் கோயில், ராமாயண வரலாற்றில் தொடர்புடையது. ராமேஸ்வரத்தில் இருந்து 10கி.மீ.,தூரத்தில் தனுஷ்கோடி செல்லும் தேசிய சாலை அருகில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து தரிசனம் செய்கின்றனர். கோயில் முன்புள்ள நிழல் தரும் பந்தல் இருபுறமும் 15 க்கு மேலான வணிக கடைகள் அமைத்து, பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்லவும், பந்தலில் ஓய்வெடுக்க முடியாமல் அவதிப் படுகின்றனர். இதனை தவிர்க்க, கோயில் எதிரே கடைகளுக்காக கோயில் நிர்வாகம் தனியாக தகர செட் அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டி வைத்துள்ளனர்.எனவே பக்தர்கள் நடைபாதை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றி, சற்று தூரத்தில் காலியாக கிடக்கும் பகுதியில் வைக்கவும், மூடிக்கிடக்கும் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, இந்து அறநிலைதுறை ஆணையர் உத்தரவிட வேண்டும், என பக்தர்கள் தெரிவித்தனர்.