புதுச்சேரி: கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநல சங்கம் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.கோடை வெயிலின் தாக்கத்தாலும், மழை பொய்த்து போனதாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையொட்டி பொதுமக்கள் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். அதன்படி கோட்டக்குப்பம் தைக்கால் திடலில் நேற்று முன்தினம் (ஜூன்., 16ல்) காலை 7.00 மணிக்கு, இஸ்லாமிய பொதுநல சங்கம் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. காலை7.30 மணி வரை நடந்த தொழுகையில், பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 150 பேர் கலந்து கொண்டு, மழை வேண்டி கைகளை உயர்த்தி இமாம் தலைமையில் இஸ்லாமி யர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.