கரூர் பத்ரகாளியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2019 02:06
கரூர்: கரூர் தொழிற்பேட்டை பத்ரகாளியம்மன் கோவிலில், மழை வேண்டி நடந்த சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கரூர் தொழிற்பேட்டை அறச்சாலை பத்ரகாளிய ம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அறச்சாலை நிறுவனர் காளிமுத்து தலைமை வகித்தார். ஜெகன்நாத ஓதுவார் பாடல் இசைக்க, சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும் மழை வேண்டி கூட்டு வழிபாடு நடந்தது. அதன்பின் நடந்த, பத்ரகாளியம்மன் புறப்பாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில், கவுரவத் தலைவர் பழனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.