பதிவு செய்த நாள்
18
ஜூன்
2019
02:06
குளித்தலை: அய்யர்மலையில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. குளித்தலை அடுத்த, அய்யர்மலையில், சுறும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. பவுர்ணமி நாளில், மாலை முதல், இரவு வரை, மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், கிரிவலம் செல்கின்றனர். அதன்படி, பவுர்ணமி தினமான நேற்று (ஜூன்., 17ல்) மாலை, 4:00 மணியில் இருந்து இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் கையில் பத்தி ஏந்தியவாறு கிரிவலம் வந்தனர். கிரிவலத்தை முன்னிட்டு, குளித்தலையில் இருந்து அய்யர்மலைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.