மண்டைக்காடு பகவதியம்மன் கோயியில் நாளை எட்டாம் கொடை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2012 11:03
குளச்சல் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நாளை (மார்ச்.20) எட்டாம் கொடைவிழா நடக்கிறது.மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடைவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றட்துடன் துவங்கி 10 நாட்கள் நடந்தது. இதில் ஆÙம் நாள் கொடைவிழாவின்போது வலியப்படுக்கை எனும் மஹாபூஜையும், ஒன்பதாம் நாள்விழாவில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலமும், பத்தாம் நாள்விழாவின் நள்ளிரவு ஒடுக்குபூஜையும் நடந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 10 ம் நாள் விழா நிறைவடைந்தபின்பு வரும் எட்டாம் நாள் எட்டாம் கொடைவிழா நடக்கிறது. இந்த ஆண்டு எட்டாம் கொடைவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு திருநடைதிறப்பு, 5 மணிக்கு புஷ்பாபிஷேகம், ஆறுமணிக்கு தீபாராதனை, மதியம் ஒருமணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை ஆறுமணிக்கு அத்தாளபூஜை, இரவு எட்டுமணிக்கு சிறப்பு தீபாராதனை உள்ளிட்டவை நடக்கிறது. எட்டாம்கொடைவிழாவை முன்னிட்டு கேரளமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல மாநிலங்களிலிலிருந்தும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். மேலும் உள்ளூர் பக்தர்கள் எட்டாம்கொடை அன்று அதிகமாக அம்மனுக்கு பொங்கல் வழிபாடு செய்வார்கள். எட்டாம் கொடைவிழா நெருங்குவதையொட்டி நேற்றும் கேரள மாநிலம் மற்றுதமிழகத்தின் பல பகுதிகலிருந்து ஆயிரக்காக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து பொங்கல் வழிபாடு செய்தனர். எட்டாம் கொடைவிழா வரை மண்டைக்காட்டில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.