பதிவு செய்த நாள்
19
மார்
2012
11:03
மண்ணச்சநல்லூர்: திருவெள்ளரை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெரும õள் கோவிலில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், 108 திவ்ய தலங்களுள் ஒன்றானதாகவும் விளங்குவது திருவெள்ளரை ஸ்ரீபுண்டரீகாசப் பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேரோட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் மார்ச் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பெருமாள் தாயாருடன் அநுமந்த் வாகனம், கருட வாகனம், சேஷவாகனம், யானை வாகனம், பூந்தேர் போன்றவற்றில் எழுந்தருளினார். நேற்றுமுன்தினம் இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி காலை 6.30 மணியளவில் பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 10 மணியளவில் மண்ணச்சநல்லூர் எம் .எல்.ஏ., பூனாட்சி, தாசில்தார் மா ரிமுத்து பாண்டியன், அறநிலையத்துறை அலுவலர்கள் தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பக்தர்களால் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு, நான்கு ரதவீதிகளை சுற்றிவந்து மதியம் 12.35 மணியளவில் தேர் நிலையை அடைந்தது. திருவிழாவில் திருவெள்ளரை, காளவாய்பட்டி, பூனாம்பாளையம், ராஜாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை கமிஷனர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பல்வேறு அமைப்பு சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து அன்னதானம், நீர், மோர், பானகம் வழங்கப்பட்டது. ஜீயபுரம் டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் 80 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.