பதிவு செய்த நாள்
21
ஜூன்
2019
12:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், உண்டியல் எண்ணும் பணி நேற்று காலை, 8:00 மணிக்கு தொடங்கியது. கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணினர். இப்பணிகள் மாலை, 5:00 மணிக்கு முடிந்தது. பக்தர்கள் செலுத்திய காணிக்கையில், பணமாக, 96 லட்சத்து, 6,772ம், தங்கம், 226 கிராம், வெள்ளி, 983 கிராம் இருந்தது என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.