பதிவு செய்த நாள்
21
ஜூன்
2019
12:06
மாமல்லபுரம்: மாமல்லபுரம், கடற்கரைக்கோவில் அகழி, பராமரிப்பின்றி சீரழிந்து, பயணியர் அருவருக்கின்றனர்.
மாமல்லபுரம், கடற்கரை பகுதியில், கி.பி., 7ல் பல்லவ மன்னன் ராஜசிம்மவர்மன், பாறைவெட்டு கற்களில், அழகிய கற்கோவில் அமைத்தார். இக்கோவில், உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணியரை கவர்கிறது.தொல்லியல் துறை, 20 ஆண்டுகளுக்கு முன், கோவில் முன்புறம், அகழ்வாய்ந்து, நிலமட்டத்தின்கீழ், கற்களாலான கட்டமைப்பு, படகிலிருந்து பொருட்கள் ஏற்றி இறக்கும், இடிபாட்டு தளம், குளம் போன்ற அகழி என, கண்டறியப்பட்டன.இப்பகுதியில், பழங்கால வடிவ படித்துறையை மட்டும், சீரமைத்த இத்துறை, அகழியை பராமரிக்கவில்லை. தற்போது அகழியில், மண் சரிந்து துார்ந்தும், குப்பை குவித்தும், செடி படர்ந்தும் துர்நாற்றத்துடன் அவலத்தில் உள்ளது.துார் வாரி, கரையை பலப்படுத்தி, புல்வெளியுடன் பராமரித்தால், ஆண்டு முழுதும், நீர் நிரம்பி, நீர்நிலை பின்னனியுடன், பயணியரை கவரும். அகழியை, துறையினர் மேம்படுத்தி பராமரிக்க, பயணியர் வலியுறுத்துகின்றனர்.