பதிவு செய்த நாள்
19
மார்
2012
11:03
கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோவில் பங்குனித் தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுண்டம் என்றெல்லாம் போற்றப்படுவதும், 108 திவ்யதேசங்களில் புகழ்பெற்றதுமான ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ வேங்கடாசலபதி ஸ்வாமிகோவில் உள்ளது. இத்தலத்தில் பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவி ண்ணகரப்பன் என ஐந்து மூர்த்திகளாக நம்மாழ்வாருக்கு தரிசனம் தந்த வேங்கடாசலபதிபெருமாள் ஒப்பிலியப்பன் என அழைக்கப்பட்டு, ஒரே தேவியான, பூமிதேவி நாச்சியாருடன் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். திருப்பதியின் பிரார்த்தனைகளை ஏற்று கொள்ளக்கூடிய சிறப்பு பெற்ற, இத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி பெ ருந்திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இவ்வாண்டும் கடந்த 10ம் தேதி காலை கொ டியேற்றத்துடன் திருவிழா து வங்கியது. விழா நாட்களில் தி னசரி இந்திரவிமானம், வெள் ளி சூரியபிரபை, வெள்ளிஆதிசேட வாகனம், கருடவாகன ம்,அனுமந்தவாகனம், யானை வாகனம், புன்னைமரம், குதி ரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நாள õன நேற்று காலை ஏழு மணிக்கு ஸ்ரீதேசிகனோடு பெருமாள் தாயார் சிறப்பு புஷ்பலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். பின் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து தேர் வடம்பிடித்தல் வைபவம் நடந்தது. காலை 7.50 மணிக்கு துவங்கிய தேரோட்டத்தினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர கோஷம் எழுப்பியவாறு, தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளுக்கும் சென்று 10.30 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து பகலிராப்பொய்கையில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. பின் ஒப்பிலியப்பன் மலராடை அணிவிப்பு திருக்காட்சி நடந்தது. மாலை ஆறு மணிக்கு உற்சவர் திருவடித் திருமஞ்சனம் நடந்தது.