உலகில் மோசடி செய்து பிழைப்பவர்கள் அதிகமாகி விட்டனர். தன் கடமையைச் செய்து முடிக்க கூட லஞ்சம் வாங்குகிறார்கள். மக்களின் வரிப்பணத்தை அரசியல்வாதிகள் சூறையாடுகிறார்கள். சிலர் பெண்களை ஏமாற்றி, முறையற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படி மோசடிகள் செய்பவர்கள் தண்டனையில் சிக்காமல், பணத்தை இறைத்து தப்பிக்க நினைக்கின்றனர். ஏன் இவர்கள் மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு நபிகள் நாயகத்தின் பதில் இதுவே. ”இறைவன் ஒரு மனிதனை அழிக்க நினைத்தால் மோசடிகளின் வாசல்களை அவனுக்கு திறந்து விடுவான். அவன் மோசடி மூலம் சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் போது, வேதனைக்கு ஆளாக்கி பிடித்துக் கொள்வான். எந்தத் தலைவன் மக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ, அவன் சுவர்க்கம் செல்ல மாட்டான்.