பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
02:06
திருச்சி: திருச்சி அருகே, மாரியம்மன் கோவில் திருவிழாவில் புறக்கணிக்கப்படுவதால், 30 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருவாக்குடியில், ஒரு சமூகத்தை சேர்ந்த, 120 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த சமூகத்தினர், கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் வரும், ஜூலை, 7ல், திருவிழா நடத்த உள்ளனர். ஆனால், அதே சமூகத்தில், 30 குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் நன்கொடை வசூலிக்காமல், கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த, 30 ஆண்டு களாக, மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த முடியாமல், பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று (ஜூன்., 25ல்), திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அதில், மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தி திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.