கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கண்ணமுத்தாம்பட்டி அன்னகாமாட்சியம்மன் கோவிலுக்கு, காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த விஜயேந்திரர் இன்று (ஜூன்., 26ல்) வருகை தர உள்ளார்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரியபாளையம் கண்ணமுத்தாம்பட்டியில், அன்ன காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி, விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று (ஜூன்., 26ல்), மாலை, 4:00 மணிக்கு வருகிறார். கோவிலில் கோ பூஜை செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஆடிட்டர் மகாதேவன், அன்ன காமாட்சியம்மன் கோவில் அறங்காவலர்கள் மாதவன், அனந்தசேகரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.