பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
02:06
உளுந்தூர்பேட்டை: திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.கொளத்தூர் கிராமத்தில் கிண்ணி பிள்ளையார் பூரண புஷ்பகலாம்பிகா சமேத ஐயனார் கோவில்களில் வரும் 11ம் தேதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதனையொட்டி வரும் 8ம் தேதி காலை 6:00 மணியளவில் ஊர் பிள்ளையாருக்கு அபிஷேகம் மற்றும் கணபதி ஹோமமும், ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. 9ம் தேதி காலை 6:30 மணியளவில் லட்சுமி நாராயண பெருமாள். மீனாட்சி அம்பிகா சமேத தடகாபுரீஸ்வர ருக்கு அபிஷேகம், கிண்ணி பிள்ளையார் ஐயனாருக்கு யாகசாலைகள் தனித்தனியாக அமைத்து மாலை 4:30 மணியளவில் யாகசாலை பிரவேசம், வாஸ்து பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை வழிபாடும் நடக்கிறது.10ம் தேதி காலை 6:30 மணிய ளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமும்; மாலை 5:00 மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.11ம் தேதி காலை 5:30 மணியளவில் 4ம் கால யாக சாலை பூஜையும், 7:00 மணியளவில் யாத்ராதானம், கலசம் புறப்பாடும், 7:30 மணிக்கு மேல் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 8.45 மணியளவில் மூலவருக்கு விசேஷ அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
கும்பாபிஷேகம் டி.கொளத்தூர் வைத்தியநாத சாஸ்திரிகள் பரம்பரை சுந்தர ராம சாஸ்திரிகள் குழுவினரால் வேத கோஷத்துடன் வைதிக முறைப்படி நடக்கிறது.