பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2019 01:06
பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (ஜூன்., 25ல்) தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவர் சந்நிதியில் மகாயாகம் நடந்தது. மாலை 5:00 முதல் 6:00 மணி வரை 108 ஹோம திரவியங்களால் மஹா கணபதி யாகம், காலபைரவர் ஹோமம் நடந்தது.மூலவர் பைரவருக்கு பால், தேன், சந்தனம் மற்றும் 21 வகையான மூலிகை பொடி மற்றும் யாகசாலை கலச நீரால் மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.