சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2019 12:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி, நடந்த கொடியேற்ற உற்சவத்தில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி ஆனித் திருமஞ்சனம் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரராதனைகள் நடந்தது. இதனைதொடர்ந்து நடராஜர் சன்னதி கொடிமரம் (துவாஜகம்பம்) மற்றும் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைதொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைப்பெற்று பிரகாரம் வலம் வந்து கொடி மரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஜூலை 3ம் தேதி தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம், 7ம் தேதி காலை 9 மணிக்கு நடராஜர் தேரோட்டம், 8ம் தேதி மதியம் 3 மணிக்கு ஆனித் திருமஞ்சனம் சிற்சபை பிரவேச தரிசனம் நடக்கிறது.