புதுச்சேரி: அரியாங்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீ மிதி திருவிழாவில், திரளான பக்தர்கள்தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.அரியாங்குப்பம் திரவுபதியம்மன் கோவில்தீ மிதி திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மாலை 6.00 மணிக்கு தீ மிதி உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.விழாவில், முதல்வர் நாராயணசாமி, அரசு கொறடா அனந்தராமன், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் சாமி தரிசனம் செய்தனர்.