பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019
01:07
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், உலக மக்கள் நன்மை அடையவும், தீமை நீங்கவும், மழை பொழியவும், பஞ்ச பூதங்களால் நன்மை கிடைக்கவும், விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று காலை 7.00 மணிக்கு துவங்கி நடந்தது. கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரி தலைமை வகித்தார். செயல் அலுவலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் சார்பில் பனிரெண்டு திருமுறையில், எட்டாம் திருமறையான மாணிக்கவாசகர் பாடி இறைவன் கைப்பட எழுதிய திருவாசம் நுால் முற்றும் ஓதி, ஞான வேள்வி நடந்தது.இதில், சிவனாடியர் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, சிவலோகநாதரை வழிபட்டு, திருவாசக முற்றோதலை கேட்டனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.