திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2019 01:07
திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டிவனம் ராஜாங்குளக்கரையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவம் கடந்த மாதம் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த மாதம் 29ம் தேதியிருந்து, மகாபாரத சொற்பொழிவும், கடந்த 11ம் தேதியிலிருந்து தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.நேற்று காலை 9.00 மணிக்கு, அரவான் களபலி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, திரவுபதி அம்மனுக்கு, துரியோதனின் ரத்தத்தால் கூந்தல் முடித்து, பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.மாலை 6.00 மணிக்கு மேல், தீர்த்தகுளம் பகுதியில் இருந்து பூங்கரகம் அலங்கரித்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பிறகு, தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.