சிவகாசி: சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாத் சார்பில் மழை வேண்டி முஸ்லிம் பள்ளியில் சிறப்பு தொழுகை நடந்தது. விருதுநகர் மாவட்டத்தில் மழையின்றி தற்போது அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகம் மற்றும் மாவட்டத்தில் மழை பெய்வதற்காக சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. சிவகாசி பேஸ் இமாம் நுாருல்லா பைஜி, யாசின் பைஜி தொழுகை நடத்தினர். சாரதா நகர் பள்ளிவாசல் பேஸ் இமாம் உசைனி அன்சாரி துவா ஓதி சிறப்பித்தார். ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். முஸ்லிம் பள்ளிகள் தாளாளார் முகைதீன் அப்துல் காதர், தலைவர் பீர் முகம்மது மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.