பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019
03:07
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ஷீரடி சாய்பாபா கோவில், முதலாமாண்டு கும்பாபி ஷேக நிறைவு விழா மற்றும் துவாரகமயி சாய்பாபா திருவுருவ சிலை பிரதிஷ்டை விழா நேற்று 30 ல், நடந்தது. இதையொட்டி சத்யசாய் பஜன் பாடல்கள், சொற்பொழிவு நடந்தது. மாலையில், துவாரகமயி சாய்பாபா திருவுருவ ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணா தியேட்டர் அருகில் தொடங் கிய ஊர்வலம், காவிரி ரோடு கருங்கல்பாளையம் வழியாக கோவிலை அடைந்தது. இரவு, 6:30 மணிக்கு முதல்கால யாக பூஜை நடந்தது. இரவு, 8:30 மணிக்கு சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. இன்று, காலை இரண்டாம் கால யாக பூஜை, அபிஷேக ஆராதனை நடக்கிறது. விழாவில், இசைப்பள்ளி மாணவர்களின் சாய் இன்னிசை, இசை கச்சேரி நிகழ்ச்சி நடக்கிறது. ஊர்வலத்தில், கோவில் நிறுவனர் சிவனேசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.