நாமக்கல்: நாமக்கல், மகரிஷிநகர் சிந்தாமணி வல்லப கணபதி ஆலயத்தில், மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. நாமக்கல் அடுத்த, வகுரம்பட்டி மகரிஷி நகரில் உள்ள, சிந்தாமணி வல்லப கணபதி கோவிலில் ஒன்பதாம் ஆண்டு பெருவிழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று (ஜூன்., 30ல்) காலை, 8:00 மணிக்கு ருத்ர ஏகாதசி புண்ணிய யாகம் மற்றும் மழை வேண்டி சிறப்பு வருண ஜெபம் நடந்தது. மதியம் அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு கணபதி சகஸ்ர நாமம், 6:30 மணிக்கு வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகள் என்ற தலைப்பில் சொற்பொழி நடந்தது.
இரவு, 8:00 மணிக்கு மங்கள ஆரத்தி நடந்தது. ஏற்பாடுகளை, சிந்தாமணி வல்லபகணபதி ஆலய அறங்காவலர் குழு தர்மகர்த்தா தில்லைசிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.