பொள்ளாச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2019 04:07
பொள்ளாச்சி:பிரதோஷ தினத்தன்று, மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது
வழக்கம்.பிரதோஷ தினமான நேற்று (ஜூன்., 30ல்), பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவில், ஐயப்பன் கோவில், ஜோதி நகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், தேவணாம்பாளையம் ஈஸ்வரன் கோவில், கப்பளாங்கரை பரமசிவமன் கோவில், தேவம்பாடி அமணேஸ்வரர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.அதில், நந்தி தேவர் மீது சிவன் மற்றும் அம்மன் பவனி வரும் நிகழ்வும் நடந்தது.