ஆனைமலை:ஆனைமலை அடுத்த சோமந்துறைசித்தூர் மாரியம்மன் கோவிலில், நாளை (ஜூலை 2ல்.,) திருக்கல்யாணம் நடக்கிறது.ஆனைமலை அடுத்த சோமந்துறைசித்தூர் மாரியம் மன் கோவிலில் பூச்சாட்டுத்திருவிழா கடந்த, 18ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி யது. தொடர்ந்து, 28ம் தேதி விநாயகர் பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. நாளை, 2ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கும்பஸ்தாபனம், அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. 3ம் தேதி காலை, 8:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், 5ம் தேதி காலை, 11:00 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.