பழநி தொட்டிச்சியம்மன் கோயிலில் ஜூலை 8ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2019 02:07
பழநி: பழநி வடக்குகிரிவீதி தொட்டிச்சியம்மன், மாரத்தியம்மன் கோயிலில் ஜூலை 8ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார்.
பழநி முருகன் கோயிலைச் சேர்ந்த வடக்குகிரி வீதியிலுள்ள தொட்டிச்சியம்மன், மாரத்தியம் மன் கோயில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் முன்னோர்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். இதனால் பழநிக்கு வரும் போது துணை முதல்வர் மறவாமல் இந்த கோயிலுக்கும் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் அவரது உதவியுடன், கடந்த சிலமாதங்களுக்கு முன் ரூ. 10 லட்சம் செலவில் கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து சுற்றிலும் கம்பிவேலிகள் அமைத்து திருப்பணிகள் முடிந்துள்ளது. இதனையடுத்து ஜூலை 7ல் யாகசாலை பூஜைகள் துவங்கி ஜூலை 8ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், குடும்பத்தினருடன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மேற்கூரைகள் அமைக்கப்பட்டு யாகசாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது.
ஏற்பாடுகளை இதனை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.