பெரியவரான குத்பு நாயகத்தை ’முஹியித்தீன் ஆண்டகை’ என்று அழைப்பர். இவரது வரலாறை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஷெய்கு அப்துல் காதிறு என்னும் புலவர் எழுதினார். ’முஹியித்தீன் ஆண்டகை புராணம்’ என பெயரிட்டார். இதில் இரண்டு காண்டங்கள், 28 படலங்கள் உள்ளன. இது தவிர, திருக்காரண புராணம், மக்கா கலம்பகம், நாகை அந்தாதி, திருமணி மாலை, கோத்திர மாலை, சொர்க்கநீதி ஆகிய நுால்களையும் இவர் எழுதியுள்ளார்.