பதிவு செய்த நாள்
03
ஜூலை
2019
11:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் சீதா தீர்த்தம் அருகே கோசுவாமி மடம் (2) மேற்கு தெருவில் உள்ள நடராஜர் தியான கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேகம் ஜூலை 8 காலை 9:45 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் நடக்கிறது.
ஜூலை 7, 8 காலை, மாலையில் யாக சாலை பூஜைகள் நடக்கின்றன. காலை 11:00 மணிக்கு திறப்பு விழா, பகல் 12:00 மணிக்கு அன்னதானம், சென்னை ஹிந்து வித்யாலயா ஆசிரியர் குழுவின் பஜனை, இரவு 7:00 மணிக்கு தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மத்திய பண்பாட்டு அமைச்சகம் சார்பில் ஸ்ரீதேவி நிருத்யாலயா குழுவின் நிருத்ய தபஸ்யா கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜூலை 9, 10 மாலை 6:00 மணிக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், கோலாட்டம், காவடியாட்டம் நடக்கிறது. கோசுவாமி மடம் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம் மற்றும் குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். தொடர்புக்கு 04573 221 108.