பூரணாங்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2019 01:07
பாகூர்: பூரணாங்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூலை 3ல்) திரவுபதி - அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதனையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, திரவுபதி-அர்ஜூனன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு திருமணக் கோலத்தில்அம்மன் வீதியுலா நடந்தது.நாளை 5ம் தேதி மாலை 5.00 மணிக்கு தீ மிதி விழாவும், நாளை மறுநாள் 6ம் தேதி தெப்பல் உற்சவமும் நடக்கிறது.