பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
02:07
திருவொற்றியூர்:ஆதிபராசக்தி அம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி... பராசக்தி என, விண்ணதிர முழங்கினர்.
திருவொற்றியூர், ராஜாஜி நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, புதிதாக, 37 அடி உயர ராட்சத கொடிமரம், பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவில் வளாகத்தில், புதிதாக ஷீரடி சாய்பாபா, அமிர்தகடேஸ்வரர், நவக்கிரஹ சன்னிதிகள் கட்டப்பட்டுள்ளன.தொடர்ந்து, நேற்று (ஜூலை 4ல்.,) காலை, அஷ்டபந்தன மஹா கும்பாபி ஷேகம் நடைபெற்றது. கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, வேள்விகள் நடத்தபட்டன. பின், புனித நீர், ராஜ கோபுரம், விமான கலசங்கள் மற்றும் கொடி மரத்தில் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபி ஷேகம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள், ஓம் சக்தி... பராசக்தி என, விண்ணதிர முழங் கினர். பின், பரிவார மூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் முடிவுற்று, மஹா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.