பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
02:07
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற் சவம், நேற்று (ஜூலை 4ல்.,) கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரம், காந்தி சாலையில், வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக் கோவில் நீண்ட காலமாக பிரம்மோற்சவம் இன்றி வழிபாடு நடந்து வந்தது.பின், இரு ஆண்டுக்கு முன், அறநிலையத் துறை மற்றும் தனியார் பங்களிப்பில், புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து, பிரம்மோற்சவம் துவங்கியது. இந்த ஆண்டு, ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், நேற்று (ஜூலை 4ல்.,) காலை, 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது முதல் நாள் காலை, சுவாமி சப்பர வாகனத்திலும், இரவு, சிம்ம வாகனத்திலும், வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தினசரி சுவாமி வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். இத்திருவிழா, வரும், 17ம் தேதி நிறைவடைகிறது.