கிருஷ்ணராயபுரம் ராம ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 03:07
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, ராம ஆஞ்சநேயர் கோவில் முதலாம் ஆண்டு நிறைவு, இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக் கால் தெருவில், ராம ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் கும்பாபிஷேக விழா ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்கம் முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று (ஜூலை 4ல்.,) மதியம், 12:00 மணிக்கு மூலவர் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திரு வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.