பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
03:07
கிருஷ்ணகிரி: கல்யாணபசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை 4ல்.,) நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை பூக்காரத் தெருவில் உள்ள கல்யாணபசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை 4ல்.,) நடந்தது.
இதையொட்டி கடந்த, 2 மாலை, 4:30 மணிக்கு, கோவிலிலிருந்து வீரவாத்தியங்களுடன் நந்திதுவஜம் மங்கள இசையுடன் புறப்பட்டு நரசிம்மசுவாமி கோவிலிலிருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. 3 காலை, 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, பூர்ணகும்ப பிரதிஷ்டை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தன. நேற்று (ஜூலை 4ல்.,) காலை, 5:00 மணிக்கு நட்சத்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி, வாசுவேதாந்த ஹோமம் ஆகியவை நடந்தது.
காலை, 10:00 மணிக்கு காந்திசிலை அருகில் இருந்து, ராஜாபுரா சமஸ்தான மடாதிபதி டாக்டர் ராஜேஸ்வர சிவாச்சார்ய சுவாமியை வெள்ளி பல்லக்கில், கும்ப மரியாதையுடன் கோவி லுக்கு அழைத்து வந்தனர். பின்னர், 10:30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து பஞ்சமுகம் ருத்ராட்சை அணிதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, தர்மகர்த்தா மற்றும் வீரசைவ லிங்காயத் சேவா சங்கம் செய்திருந்தது.