கிருஷ்ணராயபுரம் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் தீர்த்தக்குடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 03:07
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கிழக்கு கிராமம், பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கிழக்கு கிராமத்தில் புதிதாக பவதியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று (ஜூலை 4ல்.,) காலை கிருஷ்ணராயபுரம் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோவிலுக்கு சென்றனர். இந்த நிகழ்ச்சியில், 100 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து ஹோம பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நாளை மறுநாள், (ஜூலை 6ல்.,)முதல் காலயாக வேள்வி துவக்கப்படுகிறது. 8ல், கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.