சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 03:07
சிவகங்கை:சிவகங்கை குழந்தாபுரி எனும் வீரமாகாளி அம்மன் கோயில் பூக்கரக பூச்சொரிதல் விழாவையொட்டி ஜூலை 9ம் தேதி பால்குடம் எடுத்தல், பாலாபிஷேகம் நடக்கிறது.
இக் கோயிலில் கடந்த 25ம்தேதி கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
வரும் 9ம் தேதி பால்குடமும், மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பூக்கரகம், அக்னி சட்டி எடுத்து நகர் வலம் வந்து பூக்குழி இறங்குதல் நடக்கும். அன்று இரவு 9:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், 10:00 மணிக்கு அரிச்சந்திரா நாடகம் நடக்கிறது. 12 ம் தேதி பூச்சொரிதல் விழாவும், இரவு 8:00 மணிக்கு வீரகாளி அம்மன் வீதியுலா வருதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.