புதுச்சேரி சக்திவேல் பரமானந்தர் சுவாமி சத்தர் பீடத்தில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 03:07
புதுச்சேரி: முதலியார்பேட்டை சக்திவேல் பரமானந்தர் சுவாமி சித்தர் பீடத்தில் கும்பாபிஷே கம் நடந்தது.முதலியார்பேட்டை காராமணிக்குப்பம் புவன்கரே வீதியில் சக்திவேல் பரமானந் தர் சுவாமிகள் சித்தர் பீடம் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் திருச்சுற்று தெய்வங்கள், சித்தர்களுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ராஜகணபதி, பால முருகன், கால பைரவர் ஆகிய தெவங்களுக்கு கற்சிற்ப கோவிலும், கைலாசநாதர், ஐயப்பன் சுவாமி, 39 சித்தர்களுக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா நேற்று (ஜூலை 4ல்.,) நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் (ஜூலை 3ல்.,) காலை யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று (ஜூலை 4ல்.,) காலை இரண்டாம் கால வேள்ளி, பேரொளி வழிபாடு நடந்தது. காலை 10:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, கும்பாபி ஷேக விழா நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.