ஆண்டிபட்டி:ஆண்டிப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரத்தில் சற்குரு சுவாமியின் குரு பூஜை விழா நடந்தது. விழாவில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து சாதுக்கள் திரளாக கலந்து கொண்டு, சற்குரு கோயிலில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்தனர்.
கடந்த 109 ஆண்டிற்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடுப்பட்டி கிராமத்திலி ருந்து சற்குருநாதர் இல்லற வாழ்வை துறந்து பக்தி மார்க்கத்தில் நடந்து வந்து எம்.சுப்புலா புரம் கிராமத்தில் தங்கினார்.இங்கு ஊர் பெரியோர்களின் முன்னிலையில் ஜீவ சமாதி அடைந்து மீண்டும் உயிர் பெற்று , தமிழகத்தில் உள்ள பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
அவ்வாறு அவர் உயிர் பெற்ற ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில், இக்கிராம மக்கள் சாதுக்களை அழைத்து குருபூஜை செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் மழை பெய்து, விவசாயம் தொழில் வளம் பெருகும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர். மூன்று நாட்கள் விழாவில் சாதுக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.