பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
03:07
சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க, 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின் அத்தி வரதர் வைபவம், இம்மாதம், 1ம் தேதி துவங்கியது. அத்தி வரதரை தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.பக்தர்களின் வசதிக்காக, தெற்கு ரயில்வே, சென்னை கடற்கரை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து, காஞ்சி புரத்துக்கு, நாளை 6ம் தேதி முதல், 12 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. ரயில்கள், மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து இயக்கப்படும்.
சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, அதிகாலை, 4:25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், காலை, 7:15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்.
தாம்பரத்தில் இருந்து, அதிகாலை, 4:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், காலை, 6:05 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்.
செங்கல்பட்டில் இருந்து காலை, 10:00 மணி, 12:00 மணி, மதியம், 3:10 மணி மற்றும் மாலை, 5:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், காலை, 10:55 மணி, மதியம், 1:40 மணி, மாலை, 4:00 மணி மற்றும் மாலை, 6:45 மணிக்கு காஞ்சிபுரம்சென்றடையும்.
காஞ்சிபுரத்தில் இருந்து, காலை, 7:30 மணி, 9:50 மணி, நண்பகல், 12:50 மணி, மாலை, 4:05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், காலை, 8:20 மணி, 10:40 மணி, மதியம், 2:15 மணி மற்றும் 4:50 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
காஞ்சிபுரத்தில் இருந்து, மாலை, 4:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், மாலை, 6:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
காஞ்சிபுரத்தில் இருந்து, 7:45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், இரவு, 11:40 மணிக்கு, சென்னை கடற்கரை நிலையம் வந்தடையும்.