திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே அணையில் கிடைத்த அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 03:07
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே கருப்பாநதிஅணை உள்ளது. அணையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. நேற்றுமுன்தினம் (ஜூலை 3ல்.,) அங்கு பராமரிப்பு பணியின்போது பொதுப்பணித்துறையினர் 2 அடி உயரமுற்ற கற்சிலை ஒன்றை கண்டெடுத்தனர். சிலை திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியக காப்பாளர் சிவசத்தியவள்ளி கூறுகையில், 2 அடி உயரமுள்ள இந்த மகிஷா சுரமர்த்தினி சிலை 17 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். ஜடா மகுடம் உள்ளது. 8 கரங்களி லும் ஆயுதங்கள் ஏந்தியுள்ளார். அரசுனை வதம் செய்யும் கோலத்துடன் உள்ளார்.
இது கோயில்சிலையாக இருக்க வாய்ப்பில்லை. யாராவது தனிநபர்கள் வழிபட்ட பிறகு இங்கு கொண்டுவந்து போட்டிருக்கலாம் என்றார்.