பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
01:07
பொன்னேரி:அகத்தீஸ்வரர் குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை தன்னார்வலர்கள் சிலர் அகற்றி தூய்மைபடுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அதற்கு விமோ சனம் கிடைத்து உள்ளது.
பிளாஸ்டிக் குப்பை கழிவுபொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவில் முகப்பில் ஆனந்தபுஷ்கரணி பெயர் கொண்டு திருக்குளத்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேங்கி கிடந்தன.பொன்னேரி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர், கடந்த, 23 மற்றும் 30ம் தேதி தூய்மைபடுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
மூன்றாவது நாளாக நேற்று (ஜூலை., 7ல்.,), பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப் புகளை சேர்ந்தவர்கள், இளைஞர்கள் தூய்மைப் பணிகளை செய்தனர். திருக்குளத்தின் படிகளில் தேங்கி கிடந்த மண் குவியல்களை வெட்டி எடுத்து வெளியில் கொட்டினர்.
கழிவுநீர்தன்னார்வலர்களின் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது. குப்பை கழிவுகளாலும், மண் குவியல்களாலும் பாழடைந்து கிடந்த ஆனந்த புஷ்கரணி குளத்திற்கு, தற்போது விமோசனம் கிடைத்துள்ளது.திருக்குளத்தினை சுற்றிலும் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.