ஏத்தாப்பூர் பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2019 02:07
பெ.நா.பாளையம்: ஏத்தாப்பூர், பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜூலை., 7ல்) கோலாகலமாக நடந்தது. காலை, 4:30 மணியளவில் மங்கள வாத்தியம், தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு நடந்தது, 8:00 மணிக்கு மேல் கணபதி, பேட்டை மாரியம்மன், கருப்பண்ணசுவாமி, குறிஞ்சி கோபுரங்களுக்கு ஏத்தாப்பூர் ஞானஸ்கந்த சிவாச்சாரி யார் மற்றும் ஜெகதீஸ்வர சிவம் ஆகியோர் புனித நீர் ஊற்றினர். பின், பேட்டை மாரியம்மன், பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.