குமாரபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2019 02:07
குமாரபாளையம்: விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, குமாரபாளையத்தில் விநாயகர் சிலை களுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா செப்., 2ல் கொண்டாட ப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டுதோறும், 500க்கும் மேற்பட்ட விநாய கர் சிலைகள் ஒரு வாரம் கொலு வைக்கப்பட்டு, தினமும் மூன்று கால பூஜைகள் செய்யப் பட்டு, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்படும். குமாரபாளையத்தில், சிலை உற்பத்தியாளர் கார்த்திகேயன் கூறியதாவது: இறைவனுக்கு செய்யும் சேவையாக, நாங்கள் பல தலைமுறைகளாக விநாயகர் சிலை செய்து வருகிறோம். தற்போது, விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக செய்யப்படும் சிலைகளை, பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.