பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
02:07
நாமக்கல்: நாமக்கல் அடுத்த என்.கொசவம்பட்டி, காமராஜ் நகரில் உள்ள மகா மாரியம்மன், மதுரை வீரன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆனிமாதம் நடைபெறும். நடப்பாண்டு திருவிழா கடந்த, 30ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று (ஜூலை., 7ல்) காலை மோகனூர் காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, ஐயப்பன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இன்று (ஜூலை., 8ல்) காலை குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், பொங்கல் வைத்தலும் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு பூக்குழி மிதித்தல், மாவிளக்கு அழைத்தல், சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை (ஜூலை., 9ல்) காலை, 7:30 மணிக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டுதல், மதுரை வீரனுக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 10 காலை, 9:00 மணிக்கு கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.