பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
02:07
கிருஷ்ணகிரி: தூய பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவங் கியது.
இதையொட்டி நேற்று முன்தினம் (ஜூலை., 6ல்) மாலை திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தர்மபுரி மறை மாவட்ட முதன்மை குழு அம்புரோஸ் தலைமை யில், திருக்கொடியேற்றமும், தேர் பவனியும் நடைபெற்றது. குடந்தைஞானி மறையுரைற் றினார். நேற்று (ஜூலை., 7ல்) காலை திருப்பலியும், மாலை தேர் பவனியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இன்று (ஜூலை., 8ல்) முதல் வரும், 13 வரை தினமும் காலை, 6:15 மணிக்கு திருப்பலியும், மாலை, 6:30 மணிக்கு திருப்பலி மற்றும் மறை யுரையும், தேர் பவனியும் நடக்க உள்ளது. வரும், 14 காலை, 6:15 மணிக்கு, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருப்பலியும், காலை, 8:00 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடக்கிறது. மாலை அன்னையின் திருத்தேர் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 15 மாலை திருப்பலியும், தொடர்ந்து திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.