கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2019 02:07
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுத லுடன் துவங்கியது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று (ஜூலை., 7ல்)காலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் கரகம் பாலித்து திருவீதி உலா நடந்தது. இன்று (ஜூலை., 8ல்) காலை சிறப்பு அபிஷேகம் பூஜை நடக்கிறது. வரும், 10ல், தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சங்கர், தக்கார் மாரிமுத்து உள்ளிட்டோர் செய்துள்ளனர்.