பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
02:07
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா, மகா சுதர்சன யாகத்துடன் நேற்று (ஜூலை., 8ல்) துவங்கியது. நேற்று (ஜூலை., 8ல்) லட்ச ஆவர்த்தி யாகம், முதல்கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இன்று (ஜூலை., 9ல்), காலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மாலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. நாளை (ஜூலை., 10ல்) அதிகாலை, 5.30 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையில், கும்ப ஆராதனம் நடத்தப்படுகிறது. காலை, 7:00 மணிக்கு ஒரு லட்சத்து, எட்டு ஆவர்த்தி ஹோமம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து கலச புறப்பாடு, மூலமூர்த்தி மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு கும்ப தீர்த்தம் செய்யப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் உற்சவருக்கு திருமஞ்சனம் சாற்றப் பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பகல், 12:30 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, சிறப்பு வழிபாடு நடக்கிறது.