பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
03:07
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தை அடுத்த பெள்ளாதியில் நஞ்சுண்டேஸ்வரர், வீரமாசித்தியம்மன், அங்காள பரமேஸ்வரி ஆகிய மூன்று கோவில்கள் புதிதாக கட்டப்பட்டன.
கோவில் வளாகத்தில், விநாயகர், முருகர், பக்த ஆஞ்சநேயர், நவகிரக சன்னிதிகளும் அமைக் கப்பட்டன.இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 7ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று (ஜூலை., 8ல்,) மாலை, பெள்ளாதி செல்வ விநாயகர் கோவிலிருந்து முளைப்பாளிகை அழைத்து வரப்பட்டது.
இரவு கோபுர கலசங்களும், சுவாமி சிலைகள் அமைத்து அஷ்டபந்தன மருந்து சாத்தப் பட்டது.நேற்று (ஜூலை., 8ல்) காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடந்தது.
அதைத் தொடர்ந்து, 9:00 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்தக்குடங்களை கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு, மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவில் குருக்கள் கண்ணன் மற்றும் குருக்கள் கோபுர கலசங்களுக்கும், சுவாமி சிலைகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.விழாவில் மேட்டுப்பாளையம், பெள்ளாதி பக்தர்கள் மற்றும் ஊர்மக்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர். நஞ்சுண்டேஸ்வரர், வீரமாசித்தியம்மன், அங்காள பரமேஸ்வரி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.