பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
03:07
பொள்ளாச்சி:நெகமம் அடுத்த சேரிபாளையத்தில், பழமையான மங்கள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள, ஊர்மக்கள் தீர்மானித்து பணிகள் துவங்கியது.திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும், 11ம் தேதி அதிகாலை, 5:15 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.
விழாவின், முதல்நாளான நேற்று 8ம் தேதி, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் மற்றும் ஐம்பூத வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.இன்று 9ம் தேதி,, காலை, 8:30 மணிக்கு முளைப்பாரிகை வழிபாடு மற்றும் காப்பு கட்டுதலுடன் வேள்வி துவங்குகிறது.
மாலை, 5:00 மணிக்கு தீர்த்தத்துடன் முளைப்பாலிகை எடுத்துவருதல், 6:30 மணிக்கு முதல் கால வேள்வி நடக்கிறது. நாளை 10ம் தேதி, காலை, 6:00 மணிக்கு மங்கள இசையுடன் பூஜை துவங்குகிறது. காலை, 9:00 மணிக்கு திருக்குறிப்பு திருமஞ்சனம், காலை, 10:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மலர் வழிபாடு, விமான கலசம் நிறுவுதல் நடக்கிறது.
மாலை, 6:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு நடக்கிறது. வரும், 11ம் தேதி அதிகாலை, 4:15 மணிக்கு நான்காம் கால வேள்வியும், காலை, 5:15 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழாவும் நடக்கிறது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது.